திமுக பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மாதவரம் அடுத்த கொசப்பூரில் உள்ள எனது நிலத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து பதில் இல்லை
இந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி கடந்த ஆக.27 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.எனவே, சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘தனி நபர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சிலைகளை வைக்கலாம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago