தமிழ்நாடு மின்வாரியத்தில் நடத்தப்பட்ட கேங்மேன் தேர்வில் தேர்வானவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்வாரியத்தில் 5 ஆயிரம் ஊழியர்களை நியமனம் செய்வதற்கான கேங்மேன் பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. அதில், தேர்வானவர்களுக்கு, மார்ச் மாதம் 15-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.
இதற்கிடையே, கேங்மேன் பதவிக்கான எழுத்துத் தேர்வில், தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு தேர்வானவர்கள் விவரம் சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன் பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், 3 மாதங்கள் கடந்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
கேங்மேன் பணிக்கு தேர்வானவர்களின் காத்திருப்பைக் கவனத்தில் கொண்டு மின்சார வாரியம் விரைவில் அவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago