தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் பாபு(20). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்காக சோமங்கலத்தில் உள்ள விண்ணேற்பு மாதா ஆலயத்துக்குச் சென்றார். விழா முடிந்து புறப்படும்போது 5 பேர் கொண்ட கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோமங்கலம் போலீஸார் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago