புதுச்சேரியில் நேற்று புதிதாக 105 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை. மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் நேற்று கூறியதாவது:
புதுச்சேரியில் 3,178 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் புதுச்சேரியில் 70, காரைக்காலில் 2, ஏனாமில் 9, மாஹேவில் 24 என மொத்தம் 105 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆகவே உள்ளது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இது வரை 35,013 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச் சேரியில் 1,814, காரைக்காலில் 145, ஏனாமில் 49, மாஹேவில் 66 என 2,074 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 1,415, காரைக்காலில் 54, ஏனாமில் 77, மஹேவில் 77 என 1,623 பேர் மருத்துவமனைகளில் சிகிச் சையில் உள்ளனர். வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 3,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று புதுச்சேரியில் 97, காரைக்காலில் 21, ஏனாமில் 5, மாஹேவில் 24 என 147 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,724 (87.75 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 86 ஆயிரத்து 629 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 3 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந் துள்ளது எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago