கடலூர், சிதம்பரம் கோட்டங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர் பதவி பறிப்பு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய கோட்டங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் விடுதி காப்பாளர், சமையலர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் மாத ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்களை அந்தந்த விடுதி காப்பாளர்களே கருவூலத்தில் பணம் பெற்று வந்துவழங்கி வந்தனர். இந்த நடைமுறை சுமார் 30 ஆண்டுகளாக உள்ளது.

இந்த நிலையில் சிதம்பரம், கடலூர் கோட்டங்களுக்கான தனி வட்டாட்சியர் சுரேஷ்குமார் என்பவரை, தற்போது பணம் பெற்று வழங்கும் அலுவலர் பதவியை பறிக்கப்பட்ட 9 ஆதி திராவிட நல விடுதிக்கும் பணம் பெற்று வழங்கும் அலுவலராக செயல்பட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆதிதிரவிடர் நலத்துறையில் வீட்டுமனை பட்டா, சுடுகாட்டுக்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தல், விடுதிகள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்தல், பள்ளிஇடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றுதல், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் என்றஎண்ணற்ற பணிகள் இருக்கும் நிலையில் இது அவருக்கு கூடுத லான பணி சுமையாகும். இந்த பணியை அவருக்கு அளிப்பதால் மற்றப் பணிகளை சரி வர கவனிக்க முடியாத நிலை ஏற்படும் என்று விடுதி காப்பாளர்கள் சார்பில் கூறுகின்றனர்.

மேலும் மாணவர் விடுதியில் பணிபுரியும் விடுதி காப்பாளர், சமையலர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர் களுக்கு மாத ஊதியம் கடன் பெற்று தருவது,பிஎப் பணம் பெற்று தருவது, உள்ளிட்டவைகளை உடனே வழங்க முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் விடுதி பணியில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தனி வட்டாட்சியர் சுரேஷ்குமாரி டம் இதுபற்றி கேட்ட போது, “மாவட்ட ஆட்சியர் இந்த உத் தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் படி தான் என்னால் செயல்பட முடியும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விடுதி காப்பாளர்களே பணம் பெற்று வழங்கும் அலுவலர் பதவியில் இருந்து வரும் நிலையில் கடலூர், சிதம்பரம் கோட்டத்தில் மட்டும் இந்த திடீர் மாற்றத்தின் நோக்கம் என்ன என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கவில்லை. ஆட்சியர் தீவிர விசாரணை நடத்தி, தங்களுக்கு மீண்டும் பணம் பெற்று வழங்கும் அலுவலர் பதவி வழங்கிட வேண்டும் என்று விடுதி காப் பாளர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்