முதல்வர் பழனிசாமிக்கு சமூக நீதி காவலர் பட்டம் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

மதுரை அருகே நடைபெற்ற ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் முதல்வருக்கு சமூக நீதிக் காவலர் என்ற பட்டம் வழங்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். இதில் முதல்வர் பழனிசாமிக்கு சமூக நீதிக் காவலர் என்று பட்டம் வழங்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளித்து மாணவர்கள் நலன் காக்கும் அரசாக செயல்படுகிறது.

இந்தியாவில் எந்த முதல்வரும் செய்திடாத வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கும் வகையில், அவர்கள் மருத்துவப்படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதனால், முதல்வருக்கு சமூக நீதிக் காவலர் என்ற பட்டத்தை வழங் கியுள்ளோம்.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்