மதுரை விரகனூரில் 101.50 மி.மீ. மழை பதிவானது.
மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாகப் பலத்த மழை பெய்தது. ஏறக்குறைய 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8 மணி வரை) பெய்த மழை அளவு (மி.மீ.ல்): விரகனூர்-101.50, விமான நிலையம்-81.10, திரு மங்கலம்-74.6, சோழவந்தான்-30, சிட்டம்பட்டி-28.2, ஆண்டி பட்டி-24.2, மேட்டுப்பட்டி-19, கள்ளந்திரி-20.60, வாடிப்பட்டி-11, பேரையூர்-2 மிமீ மழை பெய் துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை (மி.மீ.) அளவு வருமாறு: வத்திராயிருப்பு-65, சாத்தூர்-38, பிளவக்கல் பெரியாறு அணை-34.8, கோவிலாறு அணை-8.4, திருவில்லிபுத்தூர்-18, பிளவக் கல்-6, வெம்பக்கோட்டை அணை-5.8, சிவகாசி-4, காரியாபட்டி-3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, சாஸ்தா கோவில் ஆகிய அணை களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை இல்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago