மதுரை கர்டர் பாலத்தின் கீழ் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி முதியவர் இறந்தார்.
மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங் கியது. ராஜா மில் சாலையில் உள்ள கர்டர் பாலத்தின் கீழே உள்ள சாலை தண்ணீரால் நிரம்பியது. இந்த வழியாக புதூர் ஜவஹர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசகம்(63) என்பவர் சைக்கிளில் சென்றார்.
இருளில் தண்ணீர் இருப்பது தெரியாமல் சென்றதால் சைக் கிளுடன் தண்ணீரில் மூழ்கினார். நேற்று காலை தண்ணீரை வெளியேற்றும்போதுதான் சீனி வாசகம் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இவர் கோவையில் நகை தயாரிக்கும் தொழில் செய்தார். பழங்காநத்தத்தில் மகளைப் பார்த்துவிட்டு புதூர் திரும்பும்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago