மதுரையில் மாநகராட்சி நிதி ஒதுக்கியும், தனியாரிடம் நிதி பெற்றும் தூர்வாரிய ஊருணி, குளங்களில் தற்போது மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கண்மாய், ஊருணிகள் போதிய பராமரிப்பின்றி நீர்வரத்து கால் வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்ததால் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழே சென்று விட்டது.
மேலும் வைகை அணையில் நீராதாரம் குறைந்து விட்டதால் நகரில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாந கராட்சி நிர்வாகம் நகர் பகுதி நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கியும், தனியாரிடம் நிதி பெற்றும் குளங்கள், ஊருணிகளை கடந்த ஓராண்டாக தூர்வாரி மழை நீரைத் தேக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.
மாநகராட்சியின் பெரும் முயற் சியால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றில் இருந்து தண் ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப் பப்பட்டது.
அதே போன்று தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு செய்வதற்காக மழைநீர் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி இந்தக் குளத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக் கப்பட்டது.
மேலும் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் 60 ஆண்டுக ளுக்குப் பிறகு மழைநீரைச் சேகரிக்கும் வகையில் ரயில் நிலையம், கட்டபொம்மன் சிலை வடக்குப்புறம், தங்கரீகல் திரை யரங்கின் முன்புறம் தேங்கும் மழைநீர் குழாய்கள் மூலம் தெப்பக் குளத்துக்குச் செல்ல ஏற்பாடு செய் யப்பட்டது.
இதனால், தற்போது பெய்யும் வடகிழக்குப் பருவமழை நீர் சாலைகளில் தேங்காமல் டவுன் ஹால் தெப்பக்குளத்திலும், தல் லாகுளம் திருமுக்குளத்திலும் சே கரிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறிய தாவது: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 33 ஊரு ணிகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக கோசாக்குளம் ஊருணி, சிலையனேரி ஊருணி, கோட்டங்குளம் ஊருணி, கம்பன் ஊருணி, உத்தங்குடி ஊருணி, முத்துப்பட்டி கல்தார் ஊருணி, சூறாவளிமேடு ஊருணி, மானகிரி ஊருணி, திருப்பாலை வண்ணான் ஊருணி, அனுப்பானடி சொக்காயி ஊருணி, மாட்டுத்தாவணி சாத் தையாறு ஊருணி, மிளகரணை ஊருணி, திருப்பாலை கம்பன் ஊருணி, உலகனேரி குட்டம் ஊருணி, மஸ்தான்பட்டி ஊருணி ஆகிய ஊருணிகள் தூர்வாரப்பட்டு தற்போது பெய்யும் மழைநீர் இந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படுகிறது. அதே போன்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கும் இடங்களாக 280 இடங் கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டும், உபயோகமற்ற நிலையில் இருந்த 412 ஆழ்துளை கிணறுகள் கண் டறியப்பட்டு அனைத்திலும் மழை நீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டும் மழைநீர் சேக ரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையால் மாந கராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளைக் கிணறுகளில் தடையின்றி தண்ணீர் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago