அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்த ஒரு சமூகத்தினரின் கொடிக் கம்பத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து அந்த சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் நேற்று காலை அப்பகுதியில் சாலை மறியல் செய்தனர். சதீஷ், ஆதிமுத்துகுமார், பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களிடம் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிர்மலா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அதே இடத்தில் புதிதாக கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டனர். எனினும் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago