திருப்பரங்குன்றம் கோயிலுக்கு 2015-ம் ஆண்டு அசாமில் இருந்து 14 வயதுடைய தெய்வானை என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது.
கடந்த மே 24-ம் தேதி யானையை வழக்கம்போல பாகன் காளிதாஸ் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது யானை தாக்கியதில் காளிதாஸ் உயிரிழந்தார்.
இந்நிலையில், காளிதாஸ் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், செவிலியர் பயிற்சி முடித்துள்ள அவரது மனைவி ரேவதிக்கு அரசுப் பணி வழங்கவும் தமிழக அரசுக்கு திமுக எம்எல்ஏ பா.சரவணன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், காளிதாஸின் குடும்பத்துக்கு அவர் சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் நேற்று வழங்கினார். மேலும் திருப்பரங்குன்றம் கோயிலில் காளிதாஸின் மனைவிக்கு உரிய பணி வழங்கப் பரிந்துரை செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago