விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி 89 பட்டு விவசாயிகளுக்கு ரூ.41. 44 லட்சம் மதிப்பில் விலையில்லா புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கிப் பேசினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழுதுணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம், திருச்சி பட்டு வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குநர் எல்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்