சேலம், ஈரோடு, தருமபுரியில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக் , திருச்செல்வம், அயுப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டமசோதாவை எதிர்த்து கோஷம் எழுப்பப்பட்டது.

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையத்தில் வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார். மேலிட பார்வையாளர் கரூர் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ராம.சுகந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். போராட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், தருமபுரி நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போச்சம்பள்ளியில் பேருந்து நிலையம் அருகில் நடந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் பேசினார். போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ஜாகிர் உசேன், மாவட்ட துணை தலைவர் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்