நீட் தேர்வு பயிற்சி விரைவில் தொடங்கும்; அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும், என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டும் பணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும். நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 848 பேர் பயிற்சிக்காக பதிவு செய்துள்ளனர். நேற்று கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிக்காக பதிவு செய்துள்ளனர். இது அரசுப் பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், மருத்துவராக வேண்டும் என்ற ஊக்கம் உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக ஆளுநர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 5.25 லட்சம் மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். தற்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப் பில்லை. திறந்தவெளியில் பள்ளிகள் நடத்தினால் மாணவ, மாணவியர் வெயிலிலும், பனியிலும் பாதிக்கப்படுவர், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்