ஸ்டாலின் மன்னிப்பு கேட்க அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்துவது போல நடந்துகொண்டார். திருநீறை டால்கம் பவுடர் போல பயன்படுத்தியுள்ளார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது. கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சம் பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வேல் யாத்திரை நவ.6-ம் தேதி தொடங்கி டிச.6-ம் தேதி நிறைவடைகிறது. டிச.6-ம் தேதிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேல் யாத்திரைக்கும் மத ரீதியான சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிக்காது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்டது குறித்து ஸ்டாலின் புரிதல் இல்லா மல் பேசுகிறார் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்