‘உடல், மன நலன்கள் மேம்பட சைக்கிள் ஓட்டுவது அவசியம்’

உடல் மற்றும் மன நலன்கள் மேம்பட சைக்கிள் ஓட்டுவது அவசியம் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் இரு சக்கர வாகனங்களுக்கு பாரதி தாசன் சாலையில் தனி வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த வழித்தடத்தில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் நடராஜன் பேசியது:

உடல் மற்றும் மன நலன்களை மேம்படுத்த சைக்கிள் ஓட்டுவது அவசியம். இந்த பெருந்தொற்று காலத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து உடற்பயிற்சி செய்ய சைக்கிள் ஏதுவாக உள்ளது. சைக்கிள் பயன்பாடு அதிகரித்தால், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் மற்றும் காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்க முடியும். நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நாளைய சமுதாயத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யவும், மக்கள் அனைவரும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து, இருசக்கர வாகனத் துக்கான தனி வழித்தடத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை அமைச் சர் எஸ்.வளர்மதி தொடங்கி வைத் தார்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் சு.சிவராசு தலைமை வகித் தார். மாநகர காவல் ஆணை யர் து.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணி யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வழித்தடத்தில் சைக்கிளை இயக்கி, அதன் நிறை, குறைகளை 9445967430 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில், மாநகராட்சிப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்