பெரம்பலூர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சியினர் நேற்று காலை திரண்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்து பந்தலை அகற்றினர்.
இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதன்பின், திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அரியலூர் செல்லும் வழியில், பெரம்பலூரில் கைதாகி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியினரை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பிற்பகல் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் ஜனநாயகத்துக்கு புறம்பாக செயல்படுகின்றன. பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடுவதற்கான உரிமை இங்கு மறுக்கப்படுகிறது. இது ஜனநாயக படுகொலைக்குச் சமம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago