திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்கள் நீதி மய்யத்தின் சட்டப்பேரவை தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் அருண் சிதம்பரம், ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் மணவை ஜீவா, விவசாய அணி மாநில துணை செயலாளர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ் (மத்திய) சங்கர மகாராஜா(வடகிழக்கு), சாம்சன்(வடமேற்கு), ஹரிகரன் (தென்கிழக்கு), சரவணன்(புதுக்கோட்டை), நகரச்செயலாளர் ஜெகன், ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago