கரூர்: கரூர் மாவட்டம் காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்) ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் மற்றும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாட்டில் ஊழலை ஒழித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அக்.27-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகவும், சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கரூர் மாவட்டம் காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் மற்றும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்விஆர்.கிருஷ்ணன் தலைமையில் முதன்மை பொது மேலாளர்கள் (மனிதவளம்) பி.பட்டாபிராமன், (உற்பத்தி) கே.தங்கராஜூ, விழிப்புணர்வு அதிகாரி என்.வைத்தியநாதன், உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) பி.வி.தஞ்சராயன் மற்றும் ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் மற்றும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.l
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago