திருச்சி: திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ‘கேடயம்’ என்ற திட்டத்தை டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையம் வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கிராமப் பகுதிகளுக்கு சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இச்செயலில் சிறப்பாக பணியாற்றியதாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 2 பேர் வீதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா நேற்று திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார். மேலும், அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதற்கிடையே, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 50 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பணி செய்யும் இடத்திலும், வீட்டிலும் பெண்களின் மேலாண்மை திறனை மேம்படுத்தும் வகை யிலான சிறப்பு பயிற்சியிலும் டி.ஐ.ஜி ஆனி விஜயா பங்கேற்றுப் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago