திருச்சி: திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகேயுள்ள வாளசிராமணி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் மகேஸ்வரி (32). இங்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. மகேஸ்வரி முயற்சியின்பேரில் அங்கு நில அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், மண்ணைக் கொட்டி அந்த இடத்தை சமப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. இதை பார்வையிடச் சென்ற மகேஸ்வரியிடம், அதே ஊரைச் சேர்ந்த சித்ரா என்பவர் ஆக்கிரமிப்பை அகற்றியது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கைகலப்பாக மாறியது. அப்போது சித்ரா தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தொட்டியம் அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் தாத்தையங்கார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago