காட்டுப்புத்தூர் அருகே காதலர்கள் தற்கொலை

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள ஆனைக்கல்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் நவீன்குமார் (23). கட்டுமானத் தொழிலாளியான இவர், கட்டுமான வேலைக்காக சென்று வந்தபோது நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த கல்லூரி முதலாமாண்டு மாணவியான ரிதிபாலா(17) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது.

காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், கடந்த 29-ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர்.இதனிடையே ரிதிபாலா காணாமல் போனது குறித்து அவரது தந்தை கணேசன், நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ரிதிபாலாவை தேடி வந்தனர். இந்நிலையில், ஆனைக்கல்பட்டியிலிருந்து மேலவெளிக்காடு செல்லும் வழியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நவீன்குமார், ரிதிபாலா ஆகிய இருவரும் தூக்கில் சடலமாக தொங்கினர். தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீஸார் அங்கு சென்று உடல்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒன்றுசேர விடாமல் பிரித்து விடுவார்கள் என பயந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்