நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் முதன்முறையாக பொன்மலையில் சீரமைக்கப்பட்ட ‘டெமு’ இன்ஜின்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சீரமைக்கப்பட்ட முதல் டெமு ரயில் இன்ஜின் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனை 1969-ம் ஆண்டு முதல் டீசல் ரயில் இன்ஜின் களை பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வேயில் டீசல் இன்ஜின்களின் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு மின்சாரம் மற்றும் டெமு ரயில் இன்ஜின்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

பொன்மலை ரயில்வே பணி மனையும் டீசல் பிரிவு அதன் செயல்பாடுகளை பல்நோக்கு கொண்டதாக மாற்றிக் கொண்டுள் ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில் இன்ஜின்கள் தொடர் பராம ரிப்புக்காக சென்னை பெரம்பூரில் உள்ள லோகோ பணிமனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இதனிடையே முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் டெமு இன்ஜின் பொன்மலைக்கு பராம ரிப்புப் பணிக்காக அனுப்பப் பட்டது. இந்த இன்ஜினில் ஓட்டுநர் அறையில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள், மின்விளக்குகள், மின்விசிறிகள் நவீன தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளன.

பயணிகள் அறையில், அழகிய தோற்றத்துடன் கூடிய பேனல் ஷீட்டுகள், எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் உள்ள முன்புறக் கண்ணாடிகள் மாற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட்ட டெமு ரயில் இன்ஜினை பொன்மலை தலைமை பணிமனை மேலாளர் ஷ்யாம்ந்தர் ராம் நேற்று கொடியசைத்து யார்டுக்கு அனுப்பி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்