கரூர் மாவட்டம் 26-ம் ஆண்டி லும், கரூர் நகராட்சி 147-ம் ஆண்டிலும் இன்று(நவ.1) அடி யெடுத்து வைக்கின்றன.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் கடந்த 1995 செப்.30-ம் தேதி, திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதே ஆண்டு நவ.1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் புதிய மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. பின்னர், 1997 முதல் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள் பெயரிலேயே மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், கரூர் மாவட்டம் செயல்படத் தொடங்கி நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று (நவ.1) 26-ம் ஆண்டில் நுழைகிறது. இதேபோல, 1874-ம் ஆண்டு நவ.1-ம் தேதி கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்நகராட்சி உருவாக்கப்பட்டு 146 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று(நவ.1) 147-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago