திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பந்தல்கால் நடப்பட்டது. காலை 5.30 மணிக்கு அம்மன் சந்நிதியில் வழக்கமான ஆகம விதிகளின்படி திருக் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிழா வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. பக்தர்கள் நேரில் பங்கேற்க அனுமதியில்லை. நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் கண்டுகளிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவில் வரும் 10-ம் தேதி சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 11-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விழா நாட்களில் தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் அபிஷேகம், ஆராதனை மற்றும் திருக்கோயில் வளாகத்துக்குள் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது.
இதுபோல் பாளையங் கோட்டையில் உள்ள திரிபுராந்தீஸ் வரர் திருக்கோயிலிலும் ஐப்பசி திருவிழா நேற்று காலை 8 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago