திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாக ஆணையர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
பின்னர் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கரோனா ஊரடங்கால் திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளில் தொய்வு காணப்பட்டது. தற்போது கட்டமைப்பு பணிகளில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தியு ள்ளோம். பணிகள் அனைத்தையும் துரிதமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாண்மை இயக்குநர் ஜி.கண்ணன், தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் இயக்குநர் வி.நாராயண நாயர், நகராட்சி நிர்வாக சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago