பாளையங்கோட்டையில் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்குடியின மக்களின் உரிமை களுக்காக போராடிய அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டது தவறான செயல் என்றும், திருநெல்வேலி உடையார்பட்டியில் கிறிஸ்தவ கல்லறைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
பாலபிரஜாபதி அடிகளார், ஜமாத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் பி.ஏ. காஜாமொய்னுதீன் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago