வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில் பாசன கால்வாய் களை உடனடியாக சீரமைக்குமாறு, குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை நீர்ஆதார அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், அப்போது கூறிய தாவது:
`வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, அணைகளின் நீர்மட்டம் திருப்தி கரமாக உள்ள நிலையில், வரும் காலங்களில் மழை தீவிரமடைந் தால் அணைகள் வேகமாக உச்சநீர்மட்டத்தை எட்டிவிடும். அப்போது, அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பதற்கு வசதியாக, மதகுகள், கால்வாய்களை பழுதின்றி தயாராக வைக்க வேண்டும். கால் வாய்களில் அடைப்பு உள்ளதா? என, பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பு அலுவலர்கள் கண்காணி க்க வேண்டும்’ என்றார்.
பொதுப்பணித்துறை நீர்ஆதார உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, திருவட்டாறு வட்டாட் சியர் அஜிதா கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago