குமரியில் மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
நாகர்கோவிலை அடுத்துள்ள பறக்கை இலந்தவிளையைச் சேர்ந்த மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ் கரன் மற்றும் உறவினர் ஒருவரின் தொடர் மிரட்டலால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
திமுக குமரி மாவட்ட மருத்துவ ரணி துணை அமைப்பாளராக சிவராம பெருமாள் இருந்தார். இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக திமுகவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸார் இவ் வழக்கை விசாரிக்கின்றனர். மருத்துவர் தற்கொலை தொடர் பான மேலும் ஒரு உரையாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தவுள்ளனர்.
மருத்துவரை தற்கொலைக்கு தூண்டியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, பறக்கையில் இன்று (1-ம் தேதி) காலை 10 மணிக்கு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதில், எம்எல்ஏக்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago