திருவண்ணாமலை: தெலங்கானா மாநிலத்தில் இருந்து தி.மலைக்கு சரக்கு ரயில் மூலமாக 2,750 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வந்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. கரோனா பாதிப்பு காலங்களில் கூடுதல் அரிசியை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதற்காக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு, ரயில்கள் மூலமாக தி.மலைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,750 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி (புழுங்கல்), ரயில் மூலமாக திருவண்ணாமலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம், தி.மலை அடுத்த புதுமண்ணையில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ஒதுக்கீடு செய்யப்படும் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அரிசி பிரித்து அனுப்பப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago