திருவண்ணாமலை: செய்யாறு அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை, காரணை கிராமத்தில் வசிக்கும் முதியவர் கண்ணப்பன்(60) என்பவர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியே தெரிவித்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில், மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர், 7 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. அவரிடம் பெற்றோர் கேட்டபோது, கண்ணப்பனின் கொடிய செயல்கள் தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணப்பனை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago