வருமான வரி அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை கோவை திமுக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

திமுக கோவை மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். கோவை காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள இவரது வீட்டில், 6 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 28-ம் தேதி சோதனையை தொடங்கினர். 3-வது நாளாக நேற்றும் சோதனையை மேற்கொண்ட வருமான வரி அதிகாரிகள், பையா கவுண்டரிடமும், மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது பையா கவுண்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதையறிந்த பையா கவுண்டரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்