கோவை: கோவை சேரன் மாநகரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.7.36 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை பீளமேடு போலீஸார் நேற்று முன்தினம் கைப்பற்றினர். வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாகினர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த தீப்சித்(24), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராகவேந்திரன்(21) ஆகியோர் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தது தெரியவந்தது. தீப்சித் கார் ஓட்டுநராகவும், ராகவேந்திரன் வெல்டிங் ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸார் கூறும்போது, ‘‘ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால், 2000 ரூபாய் நோட்டை நகல் எடுத்து புழக்கத்தில் விட முயன்றதாக இருவரும் தெரிவித்தனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago