கோவை சிங்காநல்லூர் குளம் 288 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தக் குளத்தில் பல வகையான மரங்கள், தாவர வகைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதால், கடந்த 2017-ம் ஆண்டு இக் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. தற்போது குளத்தின் கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். குளத்தில் உள்ள உயிரினங்கள், வளர்க்கப்பட்டுவரும் தாவர வகைகள், மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago