கோவையில் கதர் அங்காடிகளில் தீபாவளி விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் கோவை அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோயில் அருகில் செயல்படும் காதி கிராஃப்ட், ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் முன்பு செயல்படும் காதி கிராஃப்ட், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் காதி கிராஃப்ட் அங்காடிகளில் தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது.

சோப்பு, தேன், காலணிகள், பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. ‘மக்களை நோக்கி கதர் அங்காடி’ என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நடமாடும் கதர் அங்காடி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்த வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன. நேற்று முன்தினம் முதல் நவம்பர் 2-ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த வாகனம் செல்ல உள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் 7, 8, 9-ம் தேதிகளில் அவிநாசி ரோடு காதி கிராஃப்ட் அங்காடியில் மாபெரும் பட்டு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்