இதற்கு கீழ்ப்பகுதியில் வாகனங்கள் சென்று, வர ஏதுவாக சிறிய சுரங்கப்பாதை உள்ளது. இவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் சுரங்கப்பாதையின் உயரம் தெரியாமல் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், இரு புறங்களிலும் உயரமான இரும்புத் தூண்கள் உள்ளன.
சில நேரங்களில் வழி தெரியாமல் வரும் கனரக வாகனங்கள் மோதி விடுவதால், தூண்கள் சேதமடைந்துள்ளன. தற்போது அந்த தூண்கள் மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “இந்த தூண்கள் 6 மாதத்துக்கும் மேலாக சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் உள்ளது. இதனருகில் மின் கம்பிகள் இருப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தூண்களை சரி செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago