கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 61 மற்றும் 64-வது வார்டுகளில் வரி வசூலராக பணியாற்றிவந்தவர் யுவராஜ். இவர், பொதுமக்களிடம் வசூலித்த தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக யுவராஜ், கிழக்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் சத்யபிரபா ஆகியோர் முதல்கட்டமாக பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்கள் பணியாற்றிய காலத்தில் கையாளப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ததில், மாநகராட்சி பெயரில் போலியாக ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து, ஏறத்தாழ ரூ.20 லட்சம் தொகையை யுவராஜ் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago