பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா கோவை ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது. தேவரின் உருவப் படத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ, செய்தித் தொடர்பாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிச்சியில் நடந்த விழாவில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்தார்.
இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், சூலூர் ராசிபாளையம், பள்ளபாளையம், இருகூர், பட்டணம் புதூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத் தேவரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago