நாட்டிலேயே முதல்முறையாக பக்கவாத மேலாண்மைக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் வகையில் மெட்ரானிக் பிஎல்சி நிறுவனத்தின் இந்தியா மெட்ரானிக் பிரைவேட் லிமிடெட் உடன் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் கூட்டணி சேர்ந்துள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, ‘‘ஆரம்பகால சிகிச்சைதான் பக்கவாதத்தின் தீவிரத்தை குறைக்கும். AI வழியிலான சிகிச்சைஎன்பது நோயாளிகள் மீதான கவனிப்புமற்றும் உடல்நல முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது. தெற்கு ஆசியாவிலேயே பக்கவாத பாதிப்புக்கு AI உதவியுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் மருத்துவமனை என்பதில் அப்போலோ பெருமிதம் கொள்கிறது’’ என்றார்.
மெட்ரானிக் இந்திய துணைக் கண்டத்தின் துணை தலைவர் மதன் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இந்தியாவில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு, பக்கவாத நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை முறை ஆகியபணிகளுக்கு அப்போலோ உடனான இந்தகூட்டணி சிறந்த வாய்ப்பாகும்’’ என்றார்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி கூறும்போது, ‘‘நரம்பியல் துறையில் நாட்டிலேயே சிறந்த சிகிச்சை முறையை அப்போலோ கொண்டுள்ளது. மெட்ரானிக் உடனான கூட்டணி, பக்கவாத சிகிச்சை முறையை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும்’’ என்றனர்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ளஅப்போலோ மருத்துவமனை, பெங்களூருவில் பன்னர்கட்டா சாலை, ஜெயநகர், சேஷாத்ரிபுரம், மைசூரு, நவிமும்பை, அகமதாபாத், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ், டெல்லி, இந்தூர் ஆகிய 10 இடங்களில் உள்ள அப்போலோமருத்துவமனைகளில் AI நவீன சிகிச்சையை பெற முடியும் என்று அப்போலோ,மெட்ரானிக் இணைந்து வெளியிட்டுள்ளசெய்தியில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago