ஆன்லைன் மூலம் நடைபெறும் பணமோசடி தொடர்பாக போலீஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தற்போது கீழ்ப்பாக்கத்தில் பணம் இழந்த ஒருவருக்கு அதை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
சென்னை, சேத்துப்பட்டுஹாரிங்டன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கடந்த 18-ம்தேதி ரமேஷின் டெபிட் கார்டில்இருந்து ரூ.52 ஆயிரம் இணையதளம் மூலம் பண பரிவர்த்தனைசெய்யப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் சைபர் கிரைம் பிரிவில் புகார்அளித்தார். போலீஸார் விசாரணையில், ஆன்லைன் பணமோசடி கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் கிரைம்போலீஸார், தொடர்புடைய வங்கிக்கு ரமேஷின் பணத்தை உரியவழிகாட்டுதலின்படி கொடுக்கும்படி கடிதம் அனுப்பினர். அதன்பேரில் வங்கி நிர்வாகத்தினர், ரூ.52 ஆயிரத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago