தியாகராய நகர், மன்னார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார். இவர் தனது மகன்களுடன் இணைந்து அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் நகைக் கடையும், நகைப் பட்டறையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20-ம்தேதி நள்ளிரவு இந்தக் கடைக்குள்நுழைந்த மர்ம நபர்கள், ரூ.2கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்துத்து சென்றனர்.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் (37), அவரது கூட்டாளி சுரேஷ்(42), அவரது பெண் தோழிகங்கா ஆகியோர் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சுரேஷையும், கங்காவையும் போலீஸார் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கடந்த 26-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வெங்கடேசனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வெங்கடேசனை போலீஸார்,செய்யாறில் நேற்று கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago