தேசிய சுகாதார இயக்ககத்தின் புதுச்சேரி இயக்குநராக டாக்டர் ராமுலு பொறுப்பேற்றார். தற்போது இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி இயக்குநராகவும் மற்றும் அரசு மருந்தகத்தின் தலைமை பொறுப்பையும் வகித்துவரும் இவருக்கு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.
ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்படி இப்பொறுப்பினை நேற்று டாக்டர் ராமுலு ஏற்றுக் கொண்டார். இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவருக்கு சுகா தாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கெனவே இப் பொறுப்பை சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூடுதலாக வகித்து வந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago