கிராமப் புறங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

By செய்திப்பிரிவு

கிராமப் புறங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தால் ஊராட்சிகளில் நிலத்தடி நீர் சிறப்பாக இருப்பதோடு கிராம ஊராட்சிக்கு வருவாய் கிடைக்க வழி வகுக்கிறது. இதற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கிராம புறங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்தார்

4.2 ஏக்கர் நிலப்பரப்பில் 300 மாமரக் கன்றுகள், 400 பனை விதைகள் மற்றும் 100 இலுப்பை, நாவல்,புங்கை, வில்வம் உள்ளிட்ட மரக்கன்றுகள் என மொத்தம் 800 மரக்கன்றுகள் நட இருப்பதாக இத்திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, வேளாண் துணை இயக்குநர் ஜானகி ராமன் செஞ்சி வட்டாட்சியர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். அறவாழி, சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்