புதுவையில் மீலாது நபி தினமான நேற்று மதுக்கடைகளை மூடுவதில் குழப்பம் ஏன்?

By செய்திப்பிரிவு

காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் மீலாது நபி ஆகிய நாட்களில் மதுக்கடைகளை திறக்க புதுவை கலால்துறை தடை விதித்துள்ளது.

புதுவையில் நேற்று மீலாது நபி கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து மதுக்கடைகளும், மதுபார்களும் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக விசாரித்த போது, மீலாது நபிக்கு மதுக்கடைகளை திறக்கலாம் என தலைமை செயலாளர் துறை அமைச்சருக்கு கோப்பு அனுப்பியிருந்தார். ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் மத ரீதியான பண்டிகை என்பதால் வழக்கம்போல் மதுக்கடைகளை மூட உத்தரவிடும்படி தெரிவித்தார். ஆனால் மதுக்கடைகளை திறக்க கலால்துறை அனுமதித்தது. இதனால் நேற்று காலை புதுவை யில் மதுபானக் கடைகள், சாராயக் கடைகள், பார்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மதுக்கடைகளை அடைக்க கலால்துறை உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து சுமார்1 மணியளவில் வாடிக்கையா ளர்களை அவசரமாக வெளியேற்றி கடைகளை அடைத்தனர். இதனால் மது வாங்க வந்தவர்கள் பரபரப்பாகினர்.

இதுதொடர்பாக கலால்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “வழக்கமாக மதுக்கடைகள், பார்களை மீலாது நபி தினத்தன்று அடைப்பது வழக்கம். கடைகளை திறக்கலாம் என முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் சர்ச்சை எழுந்ததால் திடீரென மதியம் கடைகளை மூடச்சொல்லி உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்தனர். இதற்கிடையே மாலையில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்