நெய்வேலி என்எல்சி நகரிய நிர்வாகத்தில் ஒப்பந்த அடிப்படை யில்பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வங்கி தானியங்கி பணம்பெறும் அட்டையை ஒப்பந்ததாரர்கள் பறித்துக் கொள்வதாகவும், அந்த அட்டையைப் பயன்படுத்தி, குறைந்த அளவு ஊதியம் வழங்குவதாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எழுப்பி புகார் எழுந்தது.
இதையறிந்த சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஒப்பந்ததாரர்களைக் கண்டித்தும், முதன்மை வேலை அளிப்பவர் என்பவர் அடிப்படையில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதையடுத்து என்எல்சி நகர நிர்வாக மனிதவளத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப் பினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்
பேச்சுவார்த்தை விவரம் குறித்து சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் வேலை வழங்க ஒப்பந்தாரர்கள் தரப்பில் ஒப்பு கொண்டுள்ளனர். வங்கி கணக்கு புத்தகம், வங்கி பணம் எடுக்கம் தானியங்கி அட்டை உள்ளிட்டவைகளை அனைத்து தொழிலாளர்களிடமும் ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளனர். வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதில் முறைகேடு நடந்து இருந்தால் அதை சரி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு சாதனங்களான முகக்கவசம், கையுறை, வழங்குவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்கள். இதனால் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago