போலி கொசு மருந்து விற்று மோசடியில் ஈடுபட்டதாக கடை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் குமாரவேல் (45). பிரபல கொசு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், வெள்ளாளர் வீதியில் உள்ள ஒரு கடையில் தங்களது கொசு மருந்து நிறுவனத்தின் பேரில் போலி கொசு மருந்து விற்பனை செய்யப் பட்டுள்ளது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை ஏற்ற பெரியக்கடை போலீஸார் வெள்ளாளர் வீதியில் உள்ள குறிப்பிட்ட அந்த கடை மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago