தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பூபதி (எ) சுடோ (26). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ஊருக்குள் நுழைவதை தடுக்க கோரிமேடு போலீஸார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் பூபதி தடையை மீறி நேற்று முன்தினம் இரவு சண்முகாபுரம் மார்க்கெட் பகுதியில் சுற்றித் திரிந்தார். தகவலறிந்த கோரிமேடு ஆய்வாளர் இனியன் தலை மையிலான போலீஸார் அங்கு சென்று பூபதியை கைது செய்தனர்.
பின்னர் கரோனா பரி சோதனைக்காக அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago