புதுச்சேரியில் புதிதாக 149 பேருக்கு கரோனா பாதிப்பு குணமடைந்தோர் எண்ணிக்கை 87.59 சதவீதமாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நேற்று புதிதாக 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளி யிட்டுள்ள தகவல்:

புதுச்சேரியில் 3,560 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 97, காரைக்காலில் 27, ஏனாமில் 12, மாஹேவில் 13 என மொத்தம் 149 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இறப்புஎண்ணிக்கை 592 ஆகவே உள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34,908 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,102பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 1,637 பேர் மருத்து வமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 3,739 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மாநிலம் முழுவதும் 128 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந் தோர் எண்ணிக்கை 30,577 (87.59 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 5 ஆயிரத்து 68 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 632 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்