தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு எம்எல்ஏ பா.நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன், அமமுக மதுரை மாவட்டச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்தனர். பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் கே.ஏ.முருகன்ஜி தலைமையில் 51 தேவர் சிலைகளுடன் ஊர்வலம் நடந்தது. மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த காதலர்கள் மச்சக்காளை, ராஜேஸ்வரி. இவர்களின் திருமணத்துக்குக் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், தேவர் ஜெயந்தி தினத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago