மதுரை ஆட்சியராக த.அன்பழகன் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக த.அன்பழகன் பொறுப்பேற்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் சேலம் மாவட்ட பட்டுப்புழு வளர்ப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டார். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த த.அன்பழகன் மதுரைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் த.அன்பழகன் பொறுப்பேற்றார். பொறியியல் பட்டதாரியான இவர் 2001-ம் ஆண்டில் துணை ஆட்சியராக பணியில் சேர்ந்தார். நாகப் பட்டினத்தில் துணை ஆட்சியர், சேரன்மாதேவி கோட்டாட்சியர், சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றினார். சென்னை சுற்றுவட்டச்சாலை, பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மூலிகைத் தாவரங்கள் மேம்பாட்டுக் கழகம், எல்காட் உள்ளிட்ட துறை களில் பணியாற்றிய நிலையில், 2011-ல் ஐஏஎஸ் தகுதியைப் பெற்றார். கரூர் மாவட்ட ஆட்சியராக 31 மாதங்கள் பணியாற்றிய நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆட்சியராகப் பொறுப்பேற்ற நிகழ்வில் அவரது குடும்பத் தினரும் கலந்துகொண்டனர்.

முதல்வர் கே.பழனிசாமி பசும் பொன்னில் அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் முதல்வரை ஆட்சியர் டி.ஜி.வினய் வரவேற்றார்.

சின்னசொக்கிகுளம் தனியார் விருந்தினர் இல்லத்தில் தங்கிய முதல்வரை சந்தித்து புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற அன்பழகன் வாழ்த்துப் பெற்றார்.

நேற்று காலை 7 மணியளவில் பசும்பொன் புறப்பட்ட முதல்வரை ஆட்சியர் வினய் சந்தித்தார். பின்னர் முதல்வருடன் கோரிப் பாளையம் தேவர் சிலை வரை வந்த வினய் முதல்வரை வழி யனுப்பினார். காலை ஆட்சியராக அன்பழகன் பொறுப்பேற்றதும், சென்னை புறப்பட்ட முதல்வரை விமான நிலையத்தில் காலை 11 மணியளவில் வழியனுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்